Saturday, February 6, 2010

Song on "Mariyamman"

My kuladeivam (Family deity) is a mariamman. Her temple is located in the village of Peruncheri, which is famous for the shivan temple- Lord vagheeswara swami. The mariamman temple is lcoated within the village and is very near to the main shivan temple. It is in the route of Mayiladuthurai- Thiruvarur. The main stop is Mangainallur and from there, one has to take an auto to reach Perunjeri. In this blog, am going to share many of my compositions. Of all at first I wish to share this simple song in praise of my family deity. It can be sung as simple folk song.

செவ்வாடை சேலைக்காரி செம்பருத்தி மாலைக்காரி
செகமெல்லாம் காப்பவளே- கருமாரி
ஜெகதீசன் நாயகியே - கருமாரி
ஜெகதீசன் நாயகியே

மஞ்சளிலே குளிப்பவளே மங்கலங்கள் கொடுப்பவளே
தஞ்சையிலே திகழ்பவளே - கருமாரி
தஞ்சமென்றே ஓடி வந்தோம்- கருமாரி
தஞ்சமென்றே ஓடி வந்தோம்

வேம்புதனை சுற்றி வந்தோம் வேறுசிந்தை நீங்கி வந்தோம்
வேற்காடைத் தேடி வந்தோம்- கருமாரி
வேதனைகள் தீர்த்திடுவாய்- கருமாரி
வேதனைகள் தீர்த்திடுவாய்

மாவிளக்கு ஏற்றி வைத்தோம் மனக்குறையை இறக்கி வைத்தோம்
தேவி உந்தன் சமயபுரம்- என் தாயே
தேவை எல்லாம் தீர்க்கும் இடம்- என் தாயே
தேவை எல்லாம் தீர்க்கும் இடம்

அக்கினியில் க்ரீடமம்மா அதன் மேலே நாகமம்மா
அழகுந்தன் வடிவம் அம்மா- கருமாரி
அகமகிழ காட்சி தந்தாய்- கருமாரி
அகமகிழ காட்சி தந்தாய்


பெரும் பிழையை பொறுத்தருள்வாய் பெருகி வரும் துயர் களைவாய்
பெருஞ்சேரி மாரியளே- என் தாயே
பெரியவளே காத்தருள்வாய்- என் தாயே
பெரியவளே காத்தருள்வாய்- என் நாளும்
பெரியவளே காத்தருள்வாய்

This song can also be sing in the form of bhajans, so that others can also follow and sing the same.

No comments:

Post a Comment